/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் :மத்தியில் ஆர்வம் குறைவு'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் :மத்தியில் ஆர்வம் குறைவு
'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் :மத்தியில் ஆர்வம் குறைவு
'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் :மத்தியில் ஆர்வம் குறைவு
'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் :மத்தியில் ஆர்வம் குறைவு
ADDED : ஜன 07, 2024 11:28 PM

ஊட்டி:ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லி மலை ஓரநள்ளி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கிளை கோஸ், சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, செல்லரி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்ட சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த வகை காய்கறிகள் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில், நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. சைவப் பிரியர்களுக்கு இந்த மாதிரியான காய்கறிகள் சுவை தருவதாக கூறப்படுகிறது.
விவசாயி ராமன் கூறுகையில், ''பனிக்காலத்தில் அறுவடை செய்யப்படும் 'பிரசில்ஸ் ஸ்பிரவுட்ஸ்' எனப்படும் கிளைகோஸ்க்கு நல்ல விலை கிடைக்கிறது. கிளைகோஸ் விதை பாக்கெட்டின் விலை, 800 ரூபாயாகும். பயிர் செய்து பராமரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இதனாலேயே 'கிளை கோஸ்' பயிரிட விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. ஊட்டி மார்க்கெட் சந்தைக்கு சொற்ப அளவில் 'கிளை கோஸ்' கொண்டு வரப்படுகிறது. கிலோவுக்கு, 200 ரூபாய் விலை கிடைக்கிறது.'' என்றார்.