/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூன் 29, 2025 10:59 PM

கூடலுார்; 'கூடலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைப்பு பணியை தாமதமின்றி முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய புதிய பஸ் பகுதியில் உள்ள பழைய ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்., மாதம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் முன் பகுதி வளாகம் சீரமைக்கவில்லை.
கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கியதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை, சீரமைக்க வலியுறுத்தி, கடந்த மாதம், 31ம் தேதி சமூக ஆர்வலர்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கிய மழை நீரில், காகித கப்பல் விட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், கடந்த, 12ம் தேதி, பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்து ஏற்பட்ட சில குழிகளில் ஜல்லி கற்கள் கொட்டி சமன்படுத்தினர். தொடர்ந்து, சீரமைப்பு பணி துவங்க தாமதம் ஏற்பட்டதால், பொதுநல அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினர்.
இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஜல்லி கற்கள் கொட்டி பொக்லைன் உதவியுடன் சமன்படுத்தினர். மக்கள் கூறுகையில்,' இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.