/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூன் 05, 2025 11:17 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில், எஸ்.ஒய்.எஸ்., சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.
பள்ளிவாசல் இமாம் மொய்தீன் குட்டி வரவேற்றார். அய்முட்டி தலைமை வகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் மரங்கள் நடுதல், சோலை வனங்களை உருவாக்க வேண்டியது அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டாக்டர்கள் மாசிலாமணி, பிரவீன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நிசாம் புகாரி, ஷாஜகான், மதனி, ஈசாக், இஸ்மாயில், ஆசிப் ஜான், உம்மர், பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுகெல் நன்றி கூறினார்