Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வேளாண் உள் கட்டமைப்புக்கு ரூ.22 கோடி கடன் இலக்கு; தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

வேளாண் உள் கட்டமைப்புக்கு ரூ.22 கோடி கடன் இலக்கு; தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

வேளாண் உள் கட்டமைப்புக்கு ரூ.22 கோடி கடன் இலக்கு; தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

வேளாண் உள் கட்டமைப்புக்கு ரூ.22 கோடி கடன் இலக்கு; தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

ADDED : செப் 07, 2025 09:02 PM


Google News
ஊட்டி; விவசாய தொழில் முனைவோர் வேளாண் உள் கட்டமைப்புக்கு, 22 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள் கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக மத்திய அரசு வேளாண் உள் கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2 கோடி ரூபாய் கடன்,7 ஆண்டுகள் வரை, 3 சதவீதம் வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் பங்களிப்பு திட்ட மதிப்பீட்டில்,10 சதவீதமாகும். இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

உதாரணமாக மின்னணு வணிக மையம், கேரட் கழுவும் இயந்திரங்கள் அமைத்தல், தேயிலை தொழிற்சாலை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், காய்கறி நாற்றங்கால் அமைத்தல், ஹைட்ரோபோனிக்ஸ் காளான் வளர்ப்பு, சேமிப்பு கிடங்கு சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், மெழுகு பூசும் மையங்கள், பண்ணை கழிவு மேலாண்மை சார்ந்த உள் கட்டமைப்பு சூரிய மின் ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவைகள் அமைக்க கடன் பெறலாம்.

இதற்கு, http://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கி கிளைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், '' மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினை அணுகினால் இத்திட்டத்தின் வாயிலாக வங்கிகளில் கடன் பெற தேவையான வழிகாட்டுதல்கள் இத்துறையின் வாயிலாக செய்து தரப்படும். தவிர, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, நபார்டு வங்கி, வேளாண் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர் கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், '' என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us