/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'தண்ணி' காட்டிய யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு 'தண்ணி' காட்டிய யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
'தண்ணி' காட்டிய யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
'தண்ணி' காட்டிய யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
'தண்ணி' காட்டிய யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
ADDED : செப் 24, 2025 03:02 AM

கூடலுார்:கூடலுாரில் 12 பேரை கொன்ற 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார், ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க ஒரு வாரமாக வனத்துறையினர் போராடினர். நேற்று எல்லைமலையில் முகாமிட்ட யானையை, வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டி, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு வந்த னர்.
மதியம், 12:00 மணிக்கு பரண் மேலிருந்து, முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மேகமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் கலைவாணன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அங்கிருந்து நகர்ந்த யானையை, யானை பாகன்கள், வன ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை பாகன் கிருமாறன், காட்டு யானை மீது அமர்ந்து அதன் கழுத்தில் கயிறு கட்டினார்.
தொடர்ந்து, யானை லாரியில் ஏற்றப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், ஓவேலி பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.