/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் மின் பகிர்மான வட்ட காலாண்டு கூட்டம்; மழை காலத்துக்கு முன்பு மர கிளைகளை வெட்ட அறிவுரை ஊட்டியில் மின் பகிர்மான வட்ட காலாண்டு கூட்டம்; மழை காலத்துக்கு முன்பு மர கிளைகளை வெட்ட அறிவுரை
ஊட்டியில் மின் பகிர்மான வட்ட காலாண்டு கூட்டம்; மழை காலத்துக்கு முன்பு மர கிளைகளை வெட்ட அறிவுரை
ஊட்டியில் மின் பகிர்மான வட்ட காலாண்டு கூட்டம்; மழை காலத்துக்கு முன்பு மர கிளைகளை வெட்ட அறிவுரை
ஊட்டியில் மின் பகிர்மான வட்ட காலாண்டு கூட்டம்; மழை காலத்துக்கு முன்பு மர கிளைகளை வெட்ட அறிவுரை
ADDED : மார் 25, 2025 09:14 PM
ஊட்டி; ஊட்டியில் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சார்பில், காலாண்டு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் குப்புராணி தலைமை வகித்தார். நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் முன்னலை வகித்தார்.
அதில், கூடலுார் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் மின் நுகர்வோர் சார்பில் பேசுகையில், 'மின் நுகர்வோர் இணைப்பு பெயர் மாற்றுவதற்கு சிறப்புமுகாம் நடத்துவதுடன், மழைக்காலத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க, மின் வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை முன்னதாக அகற்ற வேண்டும்.
ஆபத்தான மின் கம்பங்களை மாற்றி அமைக்க, கட்டணத்தை குறைத்து, மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டங்களை, உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் நடத்த வேண்டும்.
கோத்தகிரி மாதா கோவில் ரோடு சமுதாய கூடம், பெத்தளா சாலை, கே.பி.எஸ்., கல்லுாரி குஞ்சப்பனை - மாமரம் இடையே, சாய்ந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும்; கோத்தகிரி ஆடுபெட்டு பகுதியில், புதிய மின் மாற்றி அமைப்பதுடன், மின் கம்பிகளை சரியான உயரத்தில் அமைக்க வேண்டும்,' என்றனர்.
கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் குப்புராணி பதிலளித்து பேசியதாவது:
மின்வாரியம் நுகர்வோர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் துறையாக உள்ளது. நுகர்வோர் குறைகளை களைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சிறப்பு முகாம்கள் தேவையில்லை.
மழை காலத்திற்கு முன்னதாக, அனைத்து பிரிவுகளிலும் மரக்கிளைகள் வெட்டி அகற்றுவதற்கு அனைத்து பொறியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பணம் கட்டி, சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கலாம்.
மேற்பார்வை பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போது, அங்கு சுழற்சி முறையில், குறை தீர்ப்பு கூட்டங்கள் நடக்க வேண்டும். மரியாதை குறைவாக நடக்கும் ஊழியர்கள் மீது, மின் பொறியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட மின்வாரிய அலுவலர்கள் பல பங்கேற்றனர்.