/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பரிதாப பலி நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பரிதாப பலி
நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பரிதாப பலி
நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பரிதாப பலி
நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பரிதாப பலி
ADDED : மார் 23, 2025 10:11 PM

பாலக்காடு: லக்காடு அருகே, நடந்து சென்றவர் லாரி மோதி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கொப்பம் கைப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம், 64. இவர் நேற்று காலை,10:00 மணியளவில் கொப்பம் டவுனில் இருந்து, வீட்டிற்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாடிழந்து அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கொப்பம் போலீசார், இப்ராஹிமின் உடலை மீட்டு பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.