வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி
வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி
வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி
ADDED : மே 26, 2025 10:33 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, வளர்ப்பு நாய் கடித்து, முதியவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கேரளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்புக்குட்டன், 74. இவரது மனைவி பிரேமா. இந்நிலையில், அப்புக்குட்டனை கடந்த ஏப்., 13ம் தேதி வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் கடித்தது. அதன்பின் சில நாட்களுக்குள் நாய் இறந்தது.
ஆனால், அப்புக்குட்டன் நாய் கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. வெறிநாய் கடி அறிகுறிகள் தென்பட்டதால், திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அப்புக்குட்டனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
அப்புக்குட்டன்
அப்புக்குட்டன்