/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மீன் வள துறையின் சதுப்பு நிலத்தில் சகதி கொட்டுவதை தடுக்க வேண்டும்!: ஊட்டியில் உள்ள பறவைகள் வாழ்விடத்தை அழிக்க கூடாது மீன் வள துறையின் சதுப்பு நிலத்தில் சகதி கொட்டுவதை தடுக்க வேண்டும்!: ஊட்டியில் உள்ள பறவைகள் வாழ்விடத்தை அழிக்க கூடாது
மீன் வள துறையின் சதுப்பு நிலத்தில் சகதி கொட்டுவதை தடுக்க வேண்டும்!: ஊட்டியில் உள்ள பறவைகள் வாழ்விடத்தை அழிக்க கூடாது
மீன் வள துறையின் சதுப்பு நிலத்தில் சகதி கொட்டுவதை தடுக்க வேண்டும்!: ஊட்டியில் உள்ள பறவைகள் வாழ்விடத்தை அழிக்க கூடாது
மீன் வள துறையின் சதுப்பு நிலத்தில் சகதி கொட்டுவதை தடுக்க வேண்டும்!: ஊட்டியில் உள்ள பறவைகள் வாழ்விடத்தை அழிக்க கூடாது
ADDED : மார் 28, 2025 03:33 AM

ஊட்டி: 'ஊட்டி படகு இல்ல ஏரியில் அகற்றப்படும் சகதியை மீன்வள துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் கொட்டும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்,' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக தனது பொலிவை மெல்ல, மெல்ல இழந்து கான்கிரீட் காடாகமாறி வருகிறது. அதில், ரியல் எஸ்டேட் துறையின் அதிதீவிர வளர்ச்சியின் காரணமாக, விவசாய தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் ஆங்காங்கே சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால், பறவைகள் வாழ்விடம் அழிவதுடன், தண்ணீர் பிரச்னை உருவெடுத்து வருகிறது.
ஊட்டி சதுப்பு நிலத்துக்கு ஆபத்து
ஊட்டி படகு இல்ல ஏரியில் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு துார் வாரும் பணி நடந்து வருகிறது. 10 லட்சம் மீட்டர் 'கியூபிக்' கொள்ளளவு கொண்ட ஊட்டி ஏரியில், 2.98 லட்சம் மீட்டர் கியூபிக் அளவுக்கு சகதி எடுக்கப்பட உள்ளது.
இங்கு எடுக்கப்படும் சகதி தீட்டுக்கல் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு பகுதிக்கு எடுத்து சென்று உரமாக மாற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏரியில் இருந்து அதிகளவில் சகதி வெளியேற்ற வேண்டி இருப்பதால், ஏரியை ஒட்டி மீன் வளத்துறைக்கு சொந்தமான பகுதியில் சகதிகளை கொட்ட பொது பணி, நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பறவைகள் இடம் மாறும் அபாயம்
இதற்காக, ஊட்டி ஏரியிலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கு சகதியை கொண்டு செல்ல குழாய் அமைத்துள்ளனர். ஆனால், மீன் வளத்துறைக்கு சொந்தமான, சில ஏக்கர் நிலம் சதுப்பு நிலம் என்பதால், அங்கு மண்ணை கொட்டி நிலத்தை அழிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் பெள்ளியப்பன் கூறுகையில்,''மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கவும், இங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சுற்றுலா திட்டங்களுக்காக, இங்குள்ள சதுப்பு நிலங்களை அழிப்பதை ஏற்று கொள்ள முடியாது.
ஊட்டி படகு இல்ல சகதிகளை மீன்வளத் துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் கொட்ட சம்பந்தப்பட்ட துறையினர் எடுத்துள்ள நடவடிக்கையை நிறுத்த வேண்டும். அப்பகுதி உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகளின் வாழ்விடமாக பல நுாற்றாண்டுகளாக உள்ளது. இதனை அழித்தால், ஆண்டு தோறும் ஊட்டிக்கு வரும் பல அரியவை பறவைகள் வேறு பகுதிக்கு இடம் மாறும். இதனால், அப்பகுதியை ஆய்வு செய்து, சகதி கொட் டுவதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டும்,'' என்றார்.
மீன் வளத்துறை உதவி இயக்குனர் கவுசல்யா தேவி கூறுகையில்,'' மீன் வளத்துறைக்கு சொந்தமான இப்பகுதியில், ஏரி சகதிகளை கொட்ட சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆனால், மேலதிகாரிகளிடம் கேட்டு பின்பு தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.