/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இட நெருக்கடியில் கோத்தகிரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் நடவடிக்கை அவசர அவசியம் இட நெருக்கடியில் கோத்தகிரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் நடவடிக்கை அவசர அவசியம்
இட நெருக்கடியில் கோத்தகிரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் நடவடிக்கை அவசர அவசியம்
இட நெருக்கடியில் கோத்தகிரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் நடவடிக்கை அவசர அவசியம்
இட நெருக்கடியில் கோத்தகிரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் நடவடிக்கை அவசர அவசியம்
ADDED : மே 13, 2025 10:42 PM

கோத்தகிரி, ;கோத்தகிரி பஸ் நிலையம் விரிவு படுத்தாததால், இட நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற கோத்தகிரி பேரூராட்சி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வரி இனங்கள் அடிப்படையில் சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், நகராட்சிக்கான, எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இங்கு இல்லை.
இங்குள்ள கோத்தகிரி அண்ணா பஸ் நிலையம், 1986, மே 4ல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த நிலையில், பஸ் நிலையம் நெருக்கடி இல்லாமல் செயல்பட்டது. நாளடைவில், மக்கள் தொகை அதிகரித்துள்ளதுடன் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கோவை உள்ளிட்ட சமவெளி பகுதி, ஊட்டி, குன்னுார் உட்பட, உள்ளூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு, 55 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, 10க்கும் மேற்பட்ட மினி பஸ்களின் இயக்கமும் இருந்து வருகிறது.
இந்நிலையில், பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால், ரேக்குகளில் நிறுத்த முடியாமல், சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், பஸ் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்து, மழை நாட்களில் ஊற்று போல் தரையில் தண்ணீர் வெளியேறுகிறது. தவிர, பஸ் நிலையம் மேல் பகுதியில் உள்ள அபாய மரங்களால் ஆபத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மரம் விழுந்து, குறிப்பிட்டநேரத்தில், ஆட்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோத்தகிரி, முக்கிய சுற்றுலா நகரமாக உள்ளதால், பஸ் நிலையம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், ' அதிக பஸ்கள் வந்து செல்லும் கோத்தகிரி பஸ் நிலையத்தை அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து விரிவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.