/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாநில எல்லையில் போதை பொருள் கடத்தல்: வாகன பரிசோதனையில் போலீசார் தீவிரம்மாநில எல்லையில் போதை பொருள் கடத்தல்: வாகன பரிசோதனையில் போலீசார் தீவிரம்
மாநில எல்லையில் போதை பொருள் கடத்தல்: வாகன பரிசோதனையில் போலீசார் தீவிரம்
மாநில எல்லையில் போதை பொருள் கடத்தல்: வாகன பரிசோதனையில் போலீசார் தீவிரம்
மாநில எல்லையில் போதை பொருள் கடத்தல்: வாகன பரிசோதனையில் போலீசார் தீவிரம்
ADDED : ஜூலை 14, 2024 01:16 PM

பந்தலுார்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பந்தலுார் தாலுகா பகுதிகள் தமிழக- கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்ட வயல், நம்பியார்குன்னு, மணல்வயல், பூலக்குண்டு, மது வந்தால் ஆகிய சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சோதனை சாவடிகளில் போலீசார், 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களுரூ, மைசூரு போன்ற இடங்களில் இருந்து, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள், தமிழக சோதனை சாவடிகள் வழியாக, கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.
இதனால், 'தமிழக எல்லையோர சோதனை சாவடிகள் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வாகன சோதனையை தீவிரப்படுத்தி போதை பொருட்கள் கடத்தல் மற்றும் சாராயம், போன்ற மது வகைகள் கடத்தலை முழுமையாக தடை செய்ய வேண்டும்,' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பந்தலுார் அருகே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், நெலக்கோட்டை பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் வாகனங்களை சோதனையிடும் பணி நடந்தது.