/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிழற்குடையில் நாய்கள்; பயணிகள் பாதிப்பு நிழற்குடையில் நாய்கள்; பயணிகள் பாதிப்பு
நிழற்குடையில் நாய்கள்; பயணிகள் பாதிப்பு
நிழற்குடையில் நாய்கள்; பயணிகள் பாதிப்பு
நிழற்குடையில் நாய்கள்; பயணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 01, 2025 10:09 PM

கோத்தகிரி:
கோத்தகிரி பஸ் நிறுத்தம் நிழற்குடையில் நாய்கள் நடமாடுவதால், பயணிகள் அமர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
கோத்தகிரி நகராட்சியில், சமீப காலமாக, தெரு நாய்கள் சாலைகளில் நடமாடுவது தொடர்கிறது. வாகனங்கள் சென்று வரும்போது, கூட்டமாக நாய்கள் துரத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.
குன்னுார் பஸ் நிறுத்தம் பயணியர் நிழற்குடையில் தெரு நாய்கள் நாள்தோறும், 'டேரா' போடுவதால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியர், ஒருங்கே அமர முடியாத நிலை உள்ளது.
மழை நாட்களில், பெரும்பாலும் நிழற்குடை இருக்கையில் நாய்கள் படுத்து விடுவதுடன், மழைக்கு ஒதுங்க வரும் பயணியரை துரத்துகின்றன.
இதனால், பயணியர் நிழற்குடைக்குள் செல்ல முடியாமல், அருகில் உள்ள கடைகளில் ஒதுங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.