/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 08:05 PM
ஊட்டி; ஊட்டி, அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், நீலகிரி,கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை;மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்தனர்.
அதன்பின், நீலகிரி தொகுதி எம்.பி.,ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,''என்றார்.
தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் , கலெக்டர் லட்சுமி பவ்யா , கூடுதல் கலெக்டர் சங்கீதா பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.