/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு வினியோகம்; வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு வினியோகம்; வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு வினியோகம்; வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு வினியோகம்; வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு வினியோகம்; வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
ADDED : செப் 19, 2025 08:32 PM
ஊட்டி; ஊட்டியில் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
ஊட்டி மார்க்கெட் பகுதியில், பஷீர் என்பவர் பெட்டிகடை வைத்து, வியாபாரம் செய்து வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சட்டத்திற்கு புறம்பாக, சிறுவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, 2023 அக்., 3ம் தேதி சப்---இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார், அந்த கடை இருந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 15 வயதுடைய சிறுவர்கள் சிலர், போலீசாரை பார்த்ததும், திடீரென கையில் இருந்த புகையிலை பொருட்களை கீழே போட்டு விட்டு, ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் கடையை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து, பஷீரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பஷீருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.