/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிதிலமடையும் எச்.பி.எப்., குடியிருப்புகள் : புனரமைத்து வாடகைக்கு விட்டால் பயன்சிதிலமடையும் எச்.பி.எப்., குடியிருப்புகள் : புனரமைத்து வாடகைக்கு விட்டால் பயன்
சிதிலமடையும் எச்.பி.எப்., குடியிருப்புகள் : புனரமைத்து வாடகைக்கு விட்டால் பயன்
சிதிலமடையும் எச்.பி.எப்., குடியிருப்புகள் : புனரமைத்து வாடகைக்கு விட்டால் பயன்
சிதிலமடையும் எச்.பி.எப்., குடியிருப்புகள் : புனரமைத்து வாடகைக்கு விட்டால் பயன்
ADDED : ஜன 12, 2024 11:32 PM

ஊட்டி;'ஊட்டி எச்.பி.எப்., குடியிருப்புகளை புனரமைத்து ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வாடகைக்கு விடவேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே, இந்து நகரில் மத்திய கனரகத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், எச்.பி.எப்., தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழிற்சாலையால், 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும்; மறை முகமாகவும் பயன் அடைந்து வந்தனர். இங்கு பணி செய்த ஊழியர்களுக்காக, எச்.பி.எப்., தொழிற்சாலையை சுற்றி, 800க்கு மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன.
உலகமயமாக்கல், தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு பின், இங்கு தயாரிக்கப்பட்டு வந்த 'போட்டோ' பிலிம் களை சந்தைப்படுத்த முடியாததால் நிறுவனம் நலிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, 2016ம் ஆண்டு தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது.
புதர் சூழ்ந்த குடியிருப்புகள்
அங்கு குடியிருந்து வந்த ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் படிப்படியாக வெளியேறினர். குடியிருப்புகள் காலியானதை அடுத்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் பராமரிக்காமல் விட்டது. குடியிருப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து, புதர் சூழ்ந்து வனவிலங்குகள்; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
தற்போது, அப்பகுதிகளில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லுார் மருத்துவமனை, கூடுதல் கலெக்டர் அலுவலகங்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். போதிய குடியிருப்புகள் கிடைக்காமல் அவதியடைந்து வரும் ஊழியர்கள் நகர் பகுதிகளில் அதிக கட்டணம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
உள்ளூ மக்கள் கூறுகையில், 'மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகள் குறித்து, மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இதனை புனரமைத்து ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வாடகைக்கு விட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.