/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 977 பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 977 பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 977 பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 977 பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 977 பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்
ADDED : ஜன 30, 2024 11:02 PM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், இரண்டு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், 977 பயனாளிகளுக்கு, 2.44 கோடி ரூபாய் வைப்பு தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா, 25 ஆயிரம் நிலையான வைப்பு தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, நிறுவனம் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது.
மேலும், முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாலும், இரண்டு குழந்தைகளுக்கும் சிறப்பு இனமாக கருதி, தலா, 25 ஆயிரம் ரூபாய்க்கான பத்திரம் வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்தவுடன், மின்விசை நிதி நிறுவனம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2021, மே, 7ம் தேதிமுதல் இதுவரை, ஊட்டி வட்டத்தில், 298 பயனாளிகளுக்கு, 74.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
குன்னுார் வட்டத்தில், 199 பயனாளிகளுக்கு, 49.75 லட்சம் ரூபாய்; கூடலுார் வட்டத்தில், 302 பயனாளிகளுக்கு, 75.50 லட்சம் ரூபாய்; கோத்தகிரி வட்டத்தில், 178 பயனாளிகளுக்கு, 44.50 லட்சம் ரூபாய் என, மொத்தம், 977 பயனாளிகளுக்கு, 2.44 கோடி மதிப்பில் வைப்பு தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.