/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2025 09:29 PM

குன்னுார்; குன்னுார் டான்டீ தலைமை அலுவலகம் முன், ஏ.ஐ.டி.யு.சி., தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் போஜராஜ் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் பேசுகையில், ''டான்டீயில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, 2022 முதல் வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்பு, மருத்துவ படி, பணிக்கொடை உள்ளிட்ட நிலுவை தொகை கள் வழங்க வேண்டும்.
அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத நிலையில், குறைந்தபட்ச ஊதிய திருத்த அரசாணை வெளியிட, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்றால், போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. ஓட்டு வேட்டைக்காக, அமைச்சர்களால் நடத்தப்படும் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், ஏழை மக்கள்நடத்தும் வாழ்வாதார போராட்டத்திற்கு அனுமதிப்பதில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், குன்னுார், கோத்தகிரி பாண்டியார் நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, தேவாலா உள்ளிட்ட தேயிலை கோட்டங்களை சேர்ந்த தொழிற்சங்க தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.