/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சேதமான சவுத்விக் சாலை; வாகன ஓட்டிகள் திணறல் சேதமான சவுத்விக் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்
சேதமான சவுத்விக் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்
சேதமான சவுத்விக் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்
சேதமான சவுத்விக் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜூன் 10, 2025 09:20 PM

ஊட்டி; ஊட்டி சவுத்விக் சாலையில் பெயர்ந்த 'இன்டர்லாக்' கற்களால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
ஊட்டி - குன்னுார் சந்திப்பு சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
குறிப்பாக, சவுத்விக் பகுதியில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் பெயர்ந்துள்ளது. பிரதான சாலையில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க முன்வராததால் சாலையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெயர்ந்த இடங்களை சீரமைக்க இன்டர்லாக் கற்கள் கொண்டுவரப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டும் சீரமைக்காமல் உள்ளனர். 'பிரதான சாலை என்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,' என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.