/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சேதமடைந்த நடைபாதை 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்திசேதமடைந்த நடைபாதை 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
சேதமடைந்த நடைபாதை 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
சேதமடைந்த நடைபாதை 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
சேதமடைந்த நடைபாதை 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
ADDED : ஜன 02, 2024 10:42 PM

கூடலுார்:'கூடலுார் பாண்டியார் டான்டீ தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார், கோழிக்கோடு சாலை குடோன் அருகே, பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் சரகம் எண்-1 தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் மாரியம்மன் கோவிலை ஒட்டிய தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு, நெல்லியாளம் நகராட்சி சார்பில் நடைபாதை அமைத்துள்ளனர். இவை பராமரிப்பின்றி, பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
நடைபாதையில், நீரோடை குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து, பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் சேதமடைந்த நடைபாதையை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.