/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நகராட்சி அமைத்த கூரை பெயர்ந்ததால் பாதிப்பு நகராட்சி அமைத்த கூரை பெயர்ந்ததால் பாதிப்பு
நகராட்சி அமைத்த கூரை பெயர்ந்ததால் பாதிப்பு
நகராட்சி அமைத்த கூரை பெயர்ந்ததால் பாதிப்பு
நகராட்சி அமைத்த கூரை பெயர்ந்ததால் பாதிப்பு
ADDED : மே 29, 2025 04:36 AM

குன்னுார்: குன்னுார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் அமைக்கப்பட்ட பயணியர் இருக்கையுடன் அமைத்த கூரை பெயர்ந்தது.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட்டில், நகராட்சி சார்பில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம், ஐகோர்ட் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில், நகராட்சி சார்பில் தடுப்பு அமைத்து, இரும்பு கம்பிகளால் இருக்கைகள் மற்றும் கூரையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கூரை திடீரென பெயர்ந்துள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூரை பயணிகள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி கூரைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.