/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வர்த்தகரிடம் ரூ.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை வர்த்தகரிடம் ரூ.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வர்த்தகரிடம் ரூ.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வர்த்தகரிடம் ரூ.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வர்த்தகரிடம் ரூ.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : மே 28, 2025 11:31 PM
குன்னுார், ; குன்னுார் வியாபாரியிடம் 'ஆன்லைன்' வர்த்தகத்தில், 30 லட்சம் மோசடி செய்தது, குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னுார் பெட்போர்டு பகுதியை சேர்ந்த, 40 வயது நபர், தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம், இவருக்கு 'டிரேடிங் அட்வைஸ்' என்ற பெயரில், குறுந்தகவல் வந்தது. இதில், லாபம் கிடைப்பதாக இருந்ததால், அதிலிருந்த இணைப்பை கிளிக் செய்து, ஆதார் மற்றும் பான் எண்களை பதிவு செய்தார். தொடர்ந்து, 50 சதவீத லாபத்தில் 'மியூச்சுவல் பண்ட்' திட்டத்தில் சேர கூறி, 11 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் என பணம் அனுப்பியுள்ளார். இவ்வாறு, ஏப்.,14 வரை, 9 முறை அவர்கள் கூறும், வெவ்வேறு வங்கி கணக்கில், 30 லட்சத்து 20 ஆயிரத்து 64 ரூபாய் செலுத்தியுள்ளார்.
இதில், ஒவ்வொரு முறையும் திட்டங்கள் மாற்றி, வங்கி கணக்குக்கு பணம் வராமல் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கடந்த, 3ம் தேதி சைபர் கிரைம் ஆன்லைன் போர்டலில், புகார் பதிவு செய்தார்.
இதன் பேரில், இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையில், போலீசார் நடவடிக்கை எடுத்து உடனடியாக ஒரு வங்கி கணக்கின் தொகை, 6 லட்சம் ரூபாயை முடக்கினர். தொடர்ந்து, மற்ற வட மாநில வங்கி கணக்குகள் குறித்தும், நபர்கள் குறித்தும் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.