/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வெள்ள பாதிப்புக்கு கவுன்சிலர்கள் நிதி உதவிவெள்ள பாதிப்புக்கு கவுன்சிலர்கள் நிதி உதவி
வெள்ள பாதிப்புக்கு கவுன்சிலர்கள் நிதி உதவி
வெள்ள பாதிப்புக்கு கவுன்சிலர்கள் நிதி உதவி
வெள்ள பாதிப்புக்கு கவுன்சிலர்கள் நிதி உதவி
ADDED : ஜன 03, 2024 11:46 PM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் தூத்துக்குடி வெள்ள நிவாரண நிதிக்காக தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்கினர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பெருமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்த மக்கள், தங்களது உடைமைகளை இழந்து, அடிப்படை வசதி இன்றி திண்டாடினர். அங்கு, தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் 27 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்கள் தங்களது ஒரு மாத ஊதியம், 1.50 லட்ச ரூபாயை தங்களது வெள்ள நிவாரண நிதியாக கோவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.