ADDED : ஜன 07, 2024 11:47 PM
கூடலுார்;கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சியில், மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 4ம் ஆண்டு விழாவை, கேக் வெட்டி கொண்டாடினர்.
ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை வகித்து, 'பதவி ஏற்று நான்காண்டுகளில், ஸ்ரீமதுரை ஊராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள்' குறித்து விளக்கினார்.
பின், 4ம் ஆண்டு நிறைவு விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில், துணைத் தலைவர் ரெஜி மேத்யூ, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜ், ஊராட்சி செயலாளர் சோனிஷாஜி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.