/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 30, 2024 11:06 PM
குன்னுார்;'குன்னுார் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கைளை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குவதில்லை,' என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. முதல் முறையாக துணை தலைவர் வாசிம் ராஜா தலைமை வகித்தார். இதற்காக, தி.மு.க.,- அ.தி.மு.க.. கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நகராட்சி கமிஷனர்பர்ஜானா முன்னிலை வகித்தார். காந்தி நினைவு தின மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பல கவுன்சிலர்கள் பேசுகையில், 'எஸ்.ஏ.டி.பி., திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் தெரிவிப்பதில்லை; இந்த நிதியில் பணிகள் நடக்காததால் கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது; நிதி திரும்பி செல்லும் என்பதால் விரைவில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சுடுகாடு பகுதியில் அரிச்சந்திரன் கட்டடம் கட்டுவதற்கு, 6 மாதங்களுக்கு முன்பு துணை தலைவர தீர்மானம் கொண்டு வந்தும் தீர்வு கிடைக்கவில்லை. நகராட்சியில் கோரிக்கைகளை நிறைவேற்ற, தீர்வு காண அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை,' என்றனர்.
கவுன்சிலர் சாந்தா : தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலக்கிறது. 2008க்கு பிறகு ஹவுசிங் போர்டு சாலை சீரமைக்கவில்லை. வீட்டிற்குள் கழிவு நீர் செல்வது குறித்து தெரிவித்தும் கடந்த, 2 ஆண்டுகளாக சரி செய்யவில்லை.
சரவணன்: மொத்த வருவாய், செலவு குறித்து பல கூட்டங்களில் கேட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மார்க்கெட் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. மீன் கழிவு வாகனம் இரவு அல்லது அதிகாலையில் கொண்டு செல்ல வேண்டும்.
ஜாகிர்: நகராட்சியில் கடந்த, 6 மாதமாக பணிகள் முறையாக நடக்கவில்லை. மவுண்ட் ரோட்டில் கடந்த, 2 மாதங்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை.
வசந்தா : நகராட்சி காலி இடத்தில் வீடு கட்டியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஆய்வு செய்ய வேண்டும்.
உமா ராணி: எனது வார்டு பணிகளை மாற்று வார்டுக்கு போடப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் : ரேஷன் கடை தடுப்பு சுவர் எழுப்பாமல் உள்ளது. தடுப்பு சுவர் எழுப்பி தேர்தல் அறிவிப்புக்கு முன் திறக்க வேண்டும்.
கமிஷனர் பர்ஜானா, ''கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்க தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.