/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் இருந்த ஈட்டி மரத்தை வெட்டியதில் சர்ச்சை சாலையில் இருந்த ஈட்டி மரத்தை வெட்டியதில் சர்ச்சை
சாலையில் இருந்த ஈட்டி மரத்தை வெட்டியதில் சர்ச்சை
சாலையில் இருந்த ஈட்டி மரத்தை வெட்டியதில் சர்ச்சை
சாலையில் இருந்த ஈட்டி மரத்தை வெட்டியதில் சர்ச்சை
ADDED : செப் 23, 2025 08:54 PM
குன்னுார்; 'குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் ஈட்டி மரம் வெட்டியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், 6வது கொண்டை ஊசி வளைவு அருகே இருந்த ஈட்டி மரம் அகற்றாமல் சுற்றியும் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.
இலைகளின்றி இருந்த இந்த மரம் தற்போது வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக பழங்குடியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
குரும்பாடி வன உரிமை குழு கிராம சபை தலைவர் சுசீலா கூறுகையில், ''சமீபத்தில் இந்த ஈட்டி மரம் அடிப்பகுதி வரை வெட்டி கடத்தப்பட்டுள்ளது குறித்த வனத்துறையினரிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அடிப்பகுதியும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. சாலையில் உள்ள ஈட்டி மரத்தை வெட்டி கடத்தியது குறித்து வனத்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில்,''அந்த ஈட்டி மரம் விழும் நிலையில் இருந்ததால் கூடுதல் கலெக்டரிடம் அனுமதி பெற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டினர். தற்போது இந்த மர துண்டுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.