/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 12, 2024 02:02 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதாக, சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார், சேரம்பாடி பஜார் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் அலி,47, என்பவர், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. 60 பாக்கெட் போதை வாஸ்துகளை பறிமுதல் செய்த போலீசார், அலி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
போலீசார் கூறுகையில், 'சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இது போன்ற தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்வது தெரிய வந்தால், பொதுமக்கள் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.