ADDED : ஜன 10, 2024 11:49 PM

சூலூர் : பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என, காங்கயம் பாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சூலூர் தாலுகாவில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. சூலூரில் அமைச்சர் முத்துசாமி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக, கலெக்டர் கிராந்தி குமார், காங்கயம் பாளையம் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என, ஆய்வு செய்தார்.
பொருட்கள் வழங்குவதை பார்வையிட்ட அவர், தொகுப்பு வழங்குவதில் புகார் எழாமல் முறையாக, தகுதியான அனைவருக்கும் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என, அறிவுறுத்தினார்.
சூலூர் தாசில்தார் நித்திலவல்லி, வட்ட வழங்கல் அலுவலர் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.