/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார் ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
ADDED : ஜூலை 04, 2025 06:40 AM

குன்னுார்; குன்னுார் ----மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டி சென்ற நபர் குறித்த 'வீடியோ' சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில், கோவையை சேர்ந்த நபர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கல்லாறு- மரப்பாலம் இடையே உள்ள பகுதியில், இளைஞர் ஒருவர் பைக் ஒட்டி சென்ற 'வீடியோ' சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே போலீசார் கூறுகையில்,'மலை ரயில் பாதையில் இளைஞர் பைக் ஓட்டும் 'வீடியோ' 2024ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், உள்ளவர் கோவையை சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலான நிலையில், தற்போது நடந்ததை போல தகவல் பரவி உள்ளது. குறிப்பிட்ட நபரை கண்டுபிடித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.