Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பயனில்லாமல் நிறுத்தப்பட்ட நிலக்கரி இன்ஜின்கள்; ரூ.10 கோடி வரை நிதி வீணாகும் அபாயம்

பயனில்லாமல் நிறுத்தப்பட்ட நிலக்கரி இன்ஜின்கள்; ரூ.10 கோடி வரை நிதி வீணாகும் அபாயம்

பயனில்லாமல் நிறுத்தப்பட்ட நிலக்கரி இன்ஜின்கள்; ரூ.10 கோடி வரை நிதி வீணாகும் அபாயம்

பயனில்லாமல் நிறுத்தப்பட்ட நிலக்கரி இன்ஜின்கள்; ரூ.10 கோடி வரை நிதி வீணாகும் அபாயம்

ADDED : ஜன 28, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
குன்னுார்:ஊட்டி மலை ரயிலுக்கான நிலக்கரி நீராவி இன்ஜின்கள் பயனில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார்,- மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில், மேட்டுப்பாளையம் முதல், குன்னுார் வரை மட்டுமே நீராவி இன்ஜின் இயக்கப்படுகிறது. ஊட்டிக்கு டீசல் இன்ஜின் மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்நிலையில், 'மலை மாவட்ட கருப்பழகி' என்ற பழமையான நிலக்கரி நீராவி இன்ஜின், பராமரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அதிகாரிகளின் மெத்தனத்தால் மேட்டுப்பாளையம் பணிமனையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இயங்காத புதிய நிலக்கரி இன்ஜின்


அதேபோல, மத்திய அரசு ரயில்வே மேம்பாடு திட்டத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 10 கோடி ரூபாயில் நமது நாட்டு உற்பத்தி பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் நிலக்கரி நீராவி இன்ஜினும் மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணாகும் நிலை உள்ளது.

மலை ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறியதாவது:

கடந்த, 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைத்து, 1918 ஆண்டு முதல் நீலகிரியில் இயக்கப்பட்டு வந்த, 'எக்ஸ் கிளாஸ் 37384' நிலக்கரி நீராவி தற்போதும் இயங்கும் நிலையில் உள்ளது. 2015ம் ஆண்டு ரயில்வே போர்டு சேர்மன் இந்த நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்க அறிவுறுத்தியும் இயக்கவில்லை.

ஏற்கனவே இயங்கும் நிலையில் இருந்த இன்ஜின்கள், குன்னுார்; ஊட்டியில் காட்சிபடுத்திய பிறகு உள்ளே இருந்த உதிரி பாகங்கள் எடுக்கப்பட்டன.

அதே போல், தற்போது இந்த இன்ஜினில் உள்ள பொருட்கள் எடுத்து, திருச்சி பொன்மலை கொண்டு சென்று மாற்று இன்ஜின்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதே போல, 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரியை கொள்முதல் செய்து இந்த இன்ஜின்கள் மூலம் ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us