/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்; சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜூன் 12, 2025 11:38 PM

பந்தலுார்; 'குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க பொதுமக்கள் முன் வரவேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பந்தலுார் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், உப்பட்டி, தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீதிமன்ற பணியாளர் ஷாலினி வரவேற்றார். பந்தலுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், ''குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளி கூடங்களுக்கு அனுப்புவது; உரிய வயது வந்த பின்னர் வேலைக்கு அனுப்புவது போன்றவற்றை கடைபிடிப்பது அவசியமாகும்,''என்றார்.
மாவட்ட சார்பு நீதிபதி பாலமுருகன் முன்னிலை வகித்து பேசுகையில், ''மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது.
அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வு உரிமைகளை மீறுவது மனித உரிமை மீறலாக கருதப்படும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவது கடுமையான குற்றச் செயலாகும். அதேபோல், 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தீங்கு விளைவிக்காத பணிகளை வழங்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால், அவர்களின் எதிர்கால வாழ்வில் அனைத்து தேவைகளையும் அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்ள வழி ஏற்படும். எனவே, குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் மட்டுமின்றி பொதுமக்களும் முன் வரவேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், தாசில்தார் சிராஜூநிஷா, வனச்சரகர் அய்யனார், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், உப்பட்டி வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள், ஐ.டி.ஐ., மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.