/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகள்; தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் அமர்க்களம் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகள்; தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் அமர்க்களம்
கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகள்; தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் அமர்க்களம்
கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகள்; தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் அமர்க்களம்
கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகள்; தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் அமர்க்களம்
ADDED : செப் 15, 2025 08:45 PM

கூடலுார்; கூடலுார் தொரப்பள்ளியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
கூடலுார் தொரப்பள்ளியில் ஸ்ரீராம பாலகோகுலம் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. புத்துார் வயல் மகாவிஷ்ணு கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, மாலையில், சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோவிலை சுற்றி வந்தனர். அங்கிருந்த குழந்தைகள் வாகனங்களில், தொரப்பள்ளி குணில் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கிருந்து, மாலை, 5:00மணிக்கு செண்டை மேளம் முழங்க கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கி, தொரப்பள்ளி ராமர் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து, மீண்டும் துவங்கிய ஊர்வலம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று தொரப்பள்ளி பால கோகுலத்தில் நிறைவு பெற்றது.
அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.