/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்

கர்ப்பப்பை நீக்கம்
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில், இங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு, 600 வெளிப்புற நோயாளிகள் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, இங்கு, இலவசமாக சாதாரண குழந்தை பிறப்பு, சிசேரியன் வாயிலாக குழந்தை பிறப்பு, அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டபூர்வமான கரு கலைப்பு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் நடக்க யோகாசன பயிற்சிகள், உரிய நிபுணர்களின் உதவியோடு அளிக்கப்படுகின்றன. தற்போது, 56 படுக்கை வசதிகள் இங்கு உள்ளன. இதை அதிகப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.2 லட்சம் செலவு
இங்கு முதல் முதலாக காரமடையை சேர்ந்த, 51 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்யும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளில், மேற்கொள்ள, 1.5 லட்சம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதை அரசு மகளிர் மருத்துவர் டாக்டர் லுபைனா மேற்கொண்டார்.