/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரூ.1.10 லட்சம் மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் ரூ.1.10 லட்சம் மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்
ரூ.1.10 லட்சம் மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்
ரூ.1.10 லட்சம் மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்
ரூ.1.10 லட்சம் மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்
ADDED : செப் 23, 2025 08:57 PM
குன்னுார், ; குன்னுார் நகராட்சி, 2வது வார்டு, மவுண்ட் பிளசன்ட் நல சங்கம் சார்பில் பல்வேறு நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்த பகுதிகளில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்தவும், குற்ற நிகழ்வுகளை எளிதில் கண்டுபிடிக்கவும், 1.10 லட்சம் ரூபாய் மதிப்பில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான துவக்க விழாவுக்கு, குன்னுார் இன்ஸ்பெக்டர் அன்பரசு ( பொ) தலைமை வகித்தார். கவுன்சிலர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
ஏற்பாடுகளை நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் குணசேகர், பொருளாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.