/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பிடிபட்டது சிறுத்தை; பந்தலுார் மக்கள் நிம்மதிபிடிபட்டது சிறுத்தை; பந்தலுார் மக்கள் நிம்மதி
பிடிபட்டது சிறுத்தை; பந்தலுார் மக்கள் நிம்மதி
பிடிபட்டது சிறுத்தை; பந்தலுார் மக்கள் நிம்மதி
பிடிபட்டது சிறுத்தை; பந்தலுார் மக்கள் நிம்மதி
ADDED : ஜன 07, 2024 11:16 PM

பந்தலுார்;பந்தலுாரில் போக்கு காட்டி வந்த சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், குடியிருப்புகள் அமைந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மேங்கோரஞ்ச் பகுதியில் வட மாநில தொழிலாளியின் மூன்று வயது குழந்தை தாயாருடன் நடந்து வந்த போது சிறுத்தை தூக்கி சென்றதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் 6 இடங்களில் கூண்டுகள் வைத்தும், 20க்கும் மேற்பட்ட இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கால்நடை டாக்டர்கள் ராஜேஷ்குமார், சதாசிவம், விஜயராகவன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போதும், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது.
கடந்த 6-ம் தேதி இரவு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய நிலையில், தப்பி சென்றது. தொடர்ந்து நேற்று காலை அம்ந்ரோஸ் வளைவு என்ற இடத்தில், சிறுத்தை படுத்திருப்பதை பொதுமக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் வித்யா, கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மற்றும் கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில், கும்கி யானை பொம்மன் உதவியுடன் ஈடுபட்டனர்.
மதியம், 2:00 மணிக்கு சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும் சிறுத்தை தப்பி, புதருக்குள் சென்று மறைந்தது. 'ட்ரோன் கேமரா 'மூலம், பல்வேறு உபகரணங்களைக் கொண்டு சிறுத்தையை வெளிப்பகுதிக்கு கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
எனினும் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் மீண்டும்' ட்ரோன் கேமரா' மூலம் சிறுத்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சிறுத்தை பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த, 16 நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை பிடிபட்டதால் பந்தலுார் மக்கள் நிம்மதி அடைந்தனர்.