/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கதவை உடைக்கும் கரடி கரோலினா மக்கள் அச்சம் கதவை உடைக்கும் கரடி கரோலினா மக்கள் அச்சம்
கதவை உடைக்கும் கரடி கரோலினா மக்கள் அச்சம்
கதவை உடைக்கும் கரடி கரோலினா மக்கள் அச்சம்
கதவை உடைக்கும் கரடி கரோலினா மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 20, 2025 06:30 AM
குன்னுார் : குன்னுார் கரோலினாவில், இரவில் கதவை உடைக்கும் கரடியால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் கரோலினா பகுதியில் கரடிகள் நடமாட்டம் பல நாட்களாக உள்ளது. அப்பகுதியில் நள்ளிரவில் வந்த கரடி அங்கு, செல்லதுரை என்பவர் பூட்டிச் சென்ற வீட்டின் கதவை உடைத்தது. உடைக்கும் சப்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்தததால் ஒட்டம் பிடித்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனத்துறை ஆய்வு செய்து சென்றனர்.
மக்கள் கூறுகையில், 'பல முறை வனத்துறைக்கு புகார்கள் தெரிவித்தும், கூண்டு வைத்து பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என்றனர்.