/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம்: பயணியர் குறைவால் 'வெறிச்'கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம்: பயணியர் குறைவால் 'வெறிச்'
கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம்: பயணியர் குறைவால் 'வெறிச்'
கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம்: பயணியர் குறைவால் 'வெறிச்'
கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம்: பயணியர் குறைவால் 'வெறிச்'
ADDED : ஜன 04, 2024 10:52 PM
ஊட்டி:ஊட்டி கேர்ன்ஹில் சூழல் சுற்றுலாவுக்கு வர வனத்துறையினர் போதிய விளம்பரம் படுத்த வேண்டும்.
ஊட்டி அருகே கேர்ன்ஹில் வனப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு அரியவகை மரங்கள் பாதுகாக்கப்பட்டதுடன், சிறுவர்கள். விளையாடி மகிழ ஏதுவாக, தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரிய வகை விலங்குகளின் தத்ரூபமான உருவ சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதி சிறந்த சுற்றுலா மையமாக மாறியதுடன், வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகைதான் குறைந்து வருகிறது.
இந்த சுற்றுலா மையம் குறித்த போதிய விளம்பரம் இல்லாததால் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வனத்துறை சார்பில் இந்த சூழல் சுற்றுலா மையத்தை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.