/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு
கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு
கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு
கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு
ADDED : ஜூன் 17, 2025 09:17 PM

குன்னூர்; குன்னூரில், குடியிருப்பு பகுதிகளில் அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விடுவித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குன்னூர் சேலாஸ் நேரு நகரில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த கரடியை பிடிக்க மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.
குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறையினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர்.
போக்கு காட்டி வந்த கரடி நேற்றிரவு கூண்டிற்குள் சிக்கியது. தொடர்ந்து, கரடியை ஊட்டி அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். கரடி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.