/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வசதிகள் இல்லாத பஸ் ஸ்டாண்ட் -மழையில் நனைந்து பஸ் ஏறும் பயணிகள் வசதிகள் இல்லாத பஸ் ஸ்டாண்ட் -மழையில் நனைந்து பஸ் ஏறும் பயணிகள்
வசதிகள் இல்லாத பஸ் ஸ்டாண்ட் -மழையில் நனைந்து பஸ் ஏறும் பயணிகள்
வசதிகள் இல்லாத பஸ் ஸ்டாண்ட் -மழையில் நனைந்து பஸ் ஏறும் பயணிகள்
வசதிகள் இல்லாத பஸ் ஸ்டாண்ட் -மழையில் நனைந்து பஸ் ஏறும் பயணிகள்
ADDED : ஜூன் 20, 2025 06:29 AM

பந்தலுார் : பந்தலுார் பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லாததால், பயணிகள் மழையில் நனைந்தபடி பஸ் ஏற வேண்டிய நிலை தொடர்கிறது.
பந்தலுாரில் கடந்த, 2014-ம் ஆண்டு நெல்லியாளம் நகராட்சி சார்பில், 2.27 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
முறையான கட்டட வடிவமைப்பு இல்லாமல், கட்டிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லாமலும், நேரக்காப்பாளர் இல்லாமலும் பெயரளவிற்கு பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது.
'மழை காலங்களில் பயணிகள் பஸ்களில் நனையாமல் ஏறுவதற்கு, கூரை அமைத்து தரப்படும்,' என, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனால், அது குறித்து கண்டுகொள்ளாத நிலையில், நாள்தோறும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தற்போது, மழை பெய்து வரும் நிலையில் பயணிகள் மற்றும் மாணவர்கள், மழையில் நனைந்தவாறு பஸ்களில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் ஏற்படுத்தி, நேரக்காப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.