Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' பணி துவக்கம்

ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' பணி துவக்கம்

ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' பணி துவக்கம்

ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' பணி துவக்கம்

ADDED : பிப் 05, 2024 09:34 PM


Google News
ஊட்டி:ஊட்டி அரசு ரோஜா பூங்காவில், ரோஜா செடிகளை 'புரூனிங்' செய்யும் பணியை கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊட்டி அரசு ரோஜா பூங்கா, 1995ல் மலர் கண்காட்சியின், 100வது ஆண்டு நினைவாக துவக்கப்பட்டு, தோட்டக்கலைத்துறை மூலம், சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, 4,201 வீரியரக ரோஜா ரகங்களில், 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

உலக ரோஜா சங்க சம்மேளனத்தால், 2006ல் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இப்பூங்கா தென்கிழக்கு ஆசியா நாடுகளிலேயே, மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்வது பெருமை அளிக்கிறது.

நடப்பாண்டு, கோடை சீசன் காலத்தை முன்னிட்டு, புரூனிங் பணிகளை மேற்கொள்வதன் மூலம், ரோஜா செடிகளில், ஏப்.,மாதம் முதல் வாரத்தில் இருந்து, ரோஜா பூக்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us