/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு 1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு
1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு
1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு
1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு
ADDED : செப் 21, 2025 01:08 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த அபு முகம்மது என்பவரின் மகன் அனாஸ், 19. குன்னுாரில் உள்ள ஒரு கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். செப்., 17ல், இறந்து விடுவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து, சானிடோரியம் சிமென்ட்ரி அருகே சூசைட் பாறை பகுதியில் நின்று, 1,000 அடி பள்ளத்தில் குதித்தார்.
பெற்றோர் புகாரின்படி, அப்பர் குன்னுார் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் இரவு, பகலாக தேடினர். நான்காவது நாளான நேற்று காலை 11:30 மணியளவில் மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.