Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 17 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்த நீலக்குறிஞ்சி; ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் காணப்படுவதால் வியப்பு

17 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்த நீலக்குறிஞ்சி; ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் காணப்படுவதால் வியப்பு

17 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்த நீலக்குறிஞ்சி; ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் காணப்படுவதால் வியப்பு

17 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்த நீலக்குறிஞ்சி; ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் காணப்படுவதால் வியப்பு

ADDED : செப் 17, 2025 08:40 PM


Google News
Latest Tamil News
கூடலுார்; கூடலுார் நாடுகாணி மலை பகுதிகளில், 17 ஆண்டுகளுக்கு பின் நீலக்குறிஞ்சி பூத்துள்ளதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடலுார் வனப்பகுதி பல அரிய வகை தாவரங்கள், பூக்களை வாழ்விடமாக கொண்டுள்ளன. அதில், நீலக்குறிஞ்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பூக்கள், ஊட்டி, கோத்தகிரி, கூடலுார், நடுவட்டம், ஓவேலி பகுதிகளில், மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்து வருகின்றன. இவை குறைந்த பட்சம், 30 முதல் 60 செ.மீ., உயரும் வளரக்கூடியது. அதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டாபிலாந்தஸ் குந்தியானஸ்' என்ற நீலக்குறிஞ்சி தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பூக்கள் நீலமலையின் அடையாளமாகவும் உள்ளன.

17 ஆண்டுக்கு பின் பூத்த குறிஞ்சி இந்நிலையில், கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துக்கு சொந்தமான, பாண்டியார் மலைப்பகுதிகளில், 2008ம் ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன்பின், தற்போது, இப்பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூக்க துவங்கி இருப்பது வனத்துறை, சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஓவேலி பகுதியிலும், 8 ஆண்டுகளுக்கு தற்போது குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.

'நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில்,''நீலகிரியில், 16 வகையான குறிஞ்சி பூக்கள் வகைகள் உள்ளன. அதில், தற்போது நாடுகாணி பகுதியில், 17 ஆண்டுகளுக்கு பிறகு பூத்த குறிஞ்சி பூக்கள், 'ஸ்டாபிலாந்தஸ் கெங்கிரியானஸ்' வகையை சார்ந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. இதே பகுதியின் சில இடங்களில் மிகவும் அரிய வகையான, வெள்ளை குறிஞ்சி பூக்களும் பூத்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது. இதனை யாரும் பறிக்காமல் ரசித்து மட்டுமே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். உலகில் குறிஞ்சி பூ என்றால், அது நீலகிரியின் அடையாளமாக இருப்பது இங்குள்ள மக்களுக்கு பெருமை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us