/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்' த.மா.கா., இளைஞரணி தலைவர் கருத்து'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்' த.மா.கா., இளைஞரணி தலைவர் கருத்து
'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்' த.மா.கா., இளைஞரணி தலைவர் கருத்து
'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்' த.மா.கா., இளைஞரணி தலைவர் கருத்து
'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்' த.மா.கா., இளைஞரணி தலைவர் கருத்து
ADDED : பிப் 24, 2024 01:45 AM

ஊட்டி;'நாட்டில் பெரிய கட்சியான பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க கூடிய சூழல் உள்ளது,' என, த.மா.கா., இளைஞரணி தலைவர் தெரிவித்தார்.
ஊட்டியில், த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாட்டில் பெரிய கட்சியான பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க கூடிய சூழல் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், பா.ஜ., வளரும் கட்சியாக உள்ளது. த.மா.கா., இம்முறை சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடும். எந்த கட்சி கூட்டணி இருந்தாலும், இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிடுவோம்.
தமிழகத்தில், தி.மு.க., அரசின் செயல்பாடு, மிக, மிக மோசமாக உள்ளது. மூன்று ஆண்டுகளில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி, 5 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மை மக்கள் தி.மு.க.,வுக்கு மீண்டும் வாக்களித்தால், தமிழகம் பின்னோக்கி செல்லும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
எங்கள் கட்சி எந்த கட்சியுடனும் 'கமிட்' ஆகவில்லை. எங்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்த்து களப்பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில பொது செயலாளர் சரத்குமார், மாவட்ட தலைவர் பாபு, துணை தலைவர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.