/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சித்த கரடி கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சித்த கரடி
கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சித்த கரடி
கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சித்த கரடி
கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சித்த கரடி
ADDED : ஜூன் 01, 2025 10:21 PM
குன்னுார்:
குன்னுார் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்த கரடி, கருவறை கதவை உடைக்க முயற்சித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. குன்னுார் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக காட்டேரி அருகே ரயில் பாதை வழியாக கரடி ஒன்று வந்து செல்கிறது. இங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் விளக்குகளின் எண்ணெயை குடிக்க வந்த கரடி, கருவறையின் கதவை நின்று கொண்டு உடைக்க முயற்சி செய்தது. தொடர்ந்து, அருகில் உள்ள பரிவார மூர்த்தி விளக்கு எண்ணெய் குடித்து சென்றது. தற்போது, இந்த 'வீடியோ' சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.