/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம் இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்
இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்
இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்
இட்டக்கல் கிராமத்தில் பசவ ஜெயந்தி விழா கோலாகலம்
ADDED : மே 21, 2025 11:04 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி அருகே உள்ள இட்டக்கல் கிராமத்தில், பசவ ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், லிங்காயத்து சமுதாய மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் நிலையில், ஆண்டுதோறும், பசவ ஜெயந்தி விழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடப்பாண்டுக்கான விழா, மைசூரு சுத்துார் மடம் ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திரா மகாசுவாமி தலைமையில், காலை, 7:45 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து பசவ ஜெயந்தி விழா தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார். அவரை, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் கவுரவித்தார். விழாவில், தேர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நடராஜ் சுவாமிகள், உறங்காடு சீனி பார்வதி பசுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காலை, 11:00 மணி முதல் பசவ ஜெயந்தி விழா ஆசியுரை, பஜனை ஆடல் பாடல் இடம் பெற்றது. விழாவில், ஓய்வு பெற்ற கர்நாடகா நீதிபதி அரலி நாகராஜ் உள்ளிட்டோர் பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிர்வாகிகள் போஜன் சந்தய்யன், சுப்ரமணி, லிங்கராஜ் மற்றும் பசவேஸ்வரா மடம் அறங்காவலர்கள், விழா குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.