Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை; திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை; திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை; திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை; திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ADDED : ஜூன் 09, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
குன்னூர்; குன்னூர் ஈத்கா மைதானத்தில், பக்ரீத் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

குன்னூரில் பக்ரீத் திருநாளையொட்டி, குன்னூர் வண்டி பேட்டையில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக மோர்ஸ் கார்டன் அருகே ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு குன்னூர் சின்னப் பள்ளிவாசல் இமாம், முப்தி வசிம் அக்ரம் ஹசனி தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது. பெட்போர்டு பள்ளிவாசல் முப்தி முஜிபுர் ரஹ்மான் காஸிமி , வெலிங்டன் பள்ளிவாசல் நிமதுல்லாஹ் தாவூதி, பர்லியார் இமாம் அப்துல் சலாம் யூசூபி , பாய்ஸ் கம்பெனி இமாம் கலீலுார் ரஹ்மான், அம்பிகாபுரம் பள்ளிவாசல் அப்சல், ஓட்டுபட்டறை பள்ளிவாசல் முகமது மழாஹிரி , சேலாஸ் பள்ளிவாசல் மம்நுான் உலுாமி, கே.எம்.கே நகர் பள்ளிவாசல் ஜஹாங்கீர் உலுாமி மற்றும் பள்ளி வாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அருவங்காடு பள்ளிவாசல் தொழுகையில் இமாம் அஸ்லாம், லவ்டேல் பள்ளிவாசலில் இமாம் சுல்தான் அல்தாபி ஆகியோர் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தன.

ஊட்டி


ஊட்டி மார்க்கெட் பகுதி பெரிய பள்ளிவாசலில் இமாம் இம்ரான் தலைமை வகித்தார், மதினா பெட்ரேசன் பள்ளிவாசலில் இமாம் அப்துல் மனான் தலைமை வகித்தார். குன்னூர் பாத்திமா பள்ளிவாசலில் நீலகிரி மாவட்ட தலைமை காஜி முஜீப் உல் ரகுமான் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பின், முன்னோர் நினைவிடங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us