/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு: சட்டப்பணிகள் ஆணைகுழு ஏற்பாடுசுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு: சட்டப்பணிகள் ஆணைகுழு ஏற்பாடு
சுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு: சட்டப்பணிகள் ஆணைகுழு ஏற்பாடு
சுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு: சட்டப்பணிகள் ஆணைகுழு ஏற்பாடு
சுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு: சட்டப்பணிகள் ஆணைகுழு ஏற்பாடு
ADDED : ஜன 10, 2024 10:36 PM
ஊட்டி : மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சட்டத்தை பற்றி அனைத்து தரப்பு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள சிறை கைதிகளுக்கு தேவையான வசதிகள், நீலகிரியில் கூட்டு பட்டா பிரச்னைகளை தீர்த்தல், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபபட்டு வருகிறது.
மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உததரவின் பேரில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் மேற்பார்வையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சூட்டிங் மட்டம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பணியில் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேற்பார்வையாளர் லிங்கம் கூறுகையில்,''வக்கீல்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கிட சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய் மிகாமல் உள்ளவர்கள் சட்ட உதவிகள் பெற தகுதி வாய்ந்தவர்கள்.
ஆலோசனை பெற விரும்புபவர்கள் சட்டப்பணிகள். ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம். கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் அந்த மாநில மொழிகளிலும் துண்டு பிரசுரம் வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.