/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'இனி இங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது': போலீசார் அறிவுரை ஊட்டியில் போலீசார் அறிவுரை'இனி இங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது': போலீசார் அறிவுரை ஊட்டியில் போலீசார் அறிவுரை
'இனி இங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது': போலீசார் அறிவுரை ஊட்டியில் போலீசார் அறிவுரை
'இனி இங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது': போலீசார் அறிவுரை ஊட்டியில் போலீசார் அறிவுரை
'இனி இங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது': போலீசார் அறிவுரை ஊட்டியில் போலீசார் அறிவுரை
ADDED : ஜன 03, 2024 11:45 PM

ஊட்டி : ஊட்டி ஸ்டேட் பாங்க் நடைபாதையில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் வேறு இடத்துக்கு மாற்றி, நடைபாதை சீரமைக்கப்பட்டதால் பாதசாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஊட்டி கமர்சியல் சாலை கீழ்புறத்திலிருந்து ஸ்டேட் பாங்க் செல்லும் நடைபாதையை ஸ்டேட் பாங்க், ஜி 1 போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், எல்.ஐ.சி., அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் இந்த நடைபாதையை பயன் படுத்துகின்றனர்.
நுழைவு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களால் மக்கள் நடந்து செல்ல பெரும் இடையூறாக இருந்தது.
'ஆட்டோக்களை வேறு இடத்துக்கு மாற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்,' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், 'இது நடைபாதை பகுதி, இனி இங்கு ஆட்டோக்களை நிறுத்த கூடாது', என, தெரிவித்ததை அடுத்து ஆட்டோக்கள் வேறு பகுதியில் நிறுத்தப்பட்டன.தற்போது சேதமான பகுதிகளை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து. அந்த நடைபாதையில் பொதுமக்கள் இடையூறின்றி நடந்து செல்கின்றனர்.