/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா
பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா
பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா
பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா
ADDED : அக் 15, 2025 11:00 PM
ஊட்டி: ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரு நாட்கள் கலை திருவிழா நடந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரு நாட்கள் கலை திருவிழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் கணேஷ் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி.,சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கலை திருவிழாவை துவக்கி வைத்தார்.
திருவிழாவில் பாட்டு, நடனம், குறும்படம், 3டி ஆர்ட் உள்ளிட்ட, 30 வகையான போட்டிகள் நடந்தது. கல்லுாரியில் பயிலும் அனைத்து மாணவர்களும், போட்டிகளில் பங்கேற்று தங்களது தனி திறமைகளை வெளிகாட்டினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். நிகழ்ச்சியில், பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


