/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜூன் 03, 2025 12:09 AM
குன்னுார்; குன்னுாரில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில், புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியிலிருந்து அந்தோணியார் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும், 8ம் தேதி சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை உறுதி பூசுதல் பெருவிழா, ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடக்கிறது. வரும், 15ல் பங்கு பெருவிழா, அன்பின் விருந்து, திருவிழா திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கின்றன.