/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 23, 2024 11:14 PM
ஊட்டி;கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், 2024 -25 கான அக்னிவீர் ஆட்சேர்கை தேர்வுக்கு, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து, ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆட்சேர்ப்பு கர்னல் -இயக்குனர் அன்ஷூல் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி உட்பட, 11 மாவட்டங்களில் இருந்து, ஆன்லைன் விண்ணப்ப தேதிகள் பிப்., 13 முதல், மார்ச், 22 வரை மற்றும் ஆன்லைன் தேர்வு தேதிகள், ஏப்., 22 முதல் இருக்கும். ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு பேரணி என, இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நியாயமாக, வெளிப்படையாக மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்க்கப்படுவர். எந்த நிலையிலும், யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட மாட்டாது. ஆட்சேர்ப்பு முகவர்களாக காட்டி கொள்ளும் நேர்மையற்ற நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் சிக்கி விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.